வியாழன், 13 பிப்ரவரி, 2014
அன்பிலும் மேலானது அன்பே!
காதல் அல்லது திருமணத்தை இரு உள்ளங்கள் இணையும் நிகழ்வாக நாம் கருதுகிறோம். ஒரு பெண்ணை/ஆணை காதலிக்க வைப்பதிலோ வெற்றிகரமாக திருமணம் செய்து கொள்வதிலோ சாதனை ஒன்றும் இல்லை. அந்த காதலை, உறவை எக்காலத்திற்குமானதாக நிலைக்கச் செய்வதில்தான் பெரும் சவால் இருக்கிறது.
கடந்த 15-20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. அதாவது அன்று வீடு தாண்டி, தெரு தாண்டி, நாடு தாண்டி ஒருவரை காதலிப்பதென்பது முடியாத அல்லது கடினமான செயலாக இருந்தது. அதனால் உறவுகளுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் மதத்திற்குள்ளும்மே பெரும்பாலனவர்களுக்கு வாழ்க்கை அமைந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை....
குடும்பமாக வாழ்வதும் ஒருவருக்கு ஒருவராக வாழ்வதும் அடிமை கருத்தியலோ பழமைவாதமோ அல்ல. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பவராக, நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மரியாதை கொண்டவராக சம உரிமை கொண்டாடுபவராக இருக்க வேண்டியது மனிதப் பண்புகளின் தலைசிறந்த அடையாளம். ஆகா, ஆண- பெண் உறவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது.
இன்றைய காதலர்கள் நாளைய தம்பதியராகவும், தம்பதியர் என்றேன்ரைக்கும் காதலர்களாகவும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, உங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்க்கைக்கு என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...!!
Courtesy:புதிய வாழ்வியல்
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!
சமீப காலமாக ஒரு சில நபரால் நட்பின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது இல்லை. அதனால் நெருங்கிய நட்புகளும் இல்லை சிலரை தவிர... எல்லாரிடமும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் தான்.. ஆனால் வாழ்வில் இடையில் ஏற்பட்ட ஒரு மன உளைச்சல் பகிர நம்பிக்கையான நட்பை தேடியது.. அதுவும் உண்மையாக முழுதும் புரிந்துகொள்ள முடிகிற நேர்மையான நட்புக்காக மனதில் தேடல் இருந்துகொண்டே இருந்தது.
மனதுக்கு நெருக்கமான நட்பாக வினோமுதலில் அறிமுகம் (முகநூலில் அல்ல), அட அழகாக இருக்கிறர்களே என்று தான் முதலில் பார்த்த போது தோன்றியது, ஆனால் சில நாட்களிலேயே என்னை அறியாமல் ஈர்த்தார் அழகை தாண்டி அன்பால்..தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்வும் என்னை குத்தி கிழித்து என் சுயத்தை அழிக்க முனைந்த நாட்கள் உண்டு. அதனாலேயே ஆரம்பத்தில் நட்பாக சிறிது தயக்கம் காட்டினேன்.. ஆனால் எல்லாவற்றையும் புறம்தள்ளி நட்பாக ஏற்று கொண்டாள். வினோவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடும் சண்டையும் அதிகம் வரும். என்னைவிட வயதில் சிறியவள். ஆனாலும் அதை எல்லாம் தாண்டி அன்பால் அந்த வயது வித்தியாசத்தை மறக்க செய்தாள். வினோவுக்கான "சுய மரியாதையை" (SELF RESPECT) நிலை நாட்டுவதில் ஒவ்வொரு முறையும் போராடி இறுதியில் நான் தோற்றே விடுகிறேன்...ஒரு நாளாவது வெற்றி பெறுவேன் என்ற மனிதத்தின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையோடு தொடர்கிறேன்...
மனக்குழப்பம் , சோர்வு என மனதளவில் நொறுங்கி இருக்கும் போது வினோவின் குரலும் பேச்சும் என்னை வெகு எளிதாக சகஜ நிலைக்கு கொண்டு வரும்.
என்ன செய்து இவள் அன்புக்கு நன்றி தெரிவிப்பது அன்பாகவே மாறி அவளுடன் கரைந்துவிடுவதை தவிர... எனக்கு possessiveness எல்லாம் கொஞ்சம் உண்டு எல்லாரிடமும் அல்ல மனதுக்கு நெருக்கமானவர்களிடம் அது வினோவிடம் நிறைய உண்டு...அதை வினோவிடம் வெளிபடுத்துவதும் இல்லை. சிலரின் நட்பு நாம் சாகும் வரை வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் ஒரு நட்பு இவளுடையது... தோழமையில் என் இறுதி வரை துணையாக நானே என்னுடயை கோவத்தால், ஈகோவால், கிறுக்குத்தனமான செயலால் சற்று தள்ளி நின்றாலும் மண்டையில் இரண்டு தட்டு தட்டி என்னை ஏற்று கொள்ள வேண்டும்...
அநேகமாக எல்லாரும் வாழ்விலும் சில துயரங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை தாண்டி தான் வந்திருப்பார்கள்.இந்த துயரம், ஏமாற்றம், அதிர்ச்சி எல்லாம் கடக்க நல்ல நட்பும் ஆறுதலான தோளும் அன்பான மனமும் நட்பாக அமைய வேண்டும்...அப்படி அமைந்த நான் ஒரு விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவன்...
அதனால் நான் தான் முதல் வாழ்த்து சொல்வேன்...எல்லா வளமும் பெற்று மன நிறைவாக, சந்தோசமாக, ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்...