சனி, 1 நவம்பர், 2014
நன்றி...நன்றி...நன்றி...
இந்த நவம்பரில் கால் நூற்றாண்டு வயதில் அடி எடுத்து வைக்கிறேன். ஓரளவு நல்லது கெட்டது பற்றிய அறிவு எனக்கும் உண்டு. எல்லோரையும் போல எல்லாவற்றையும் தாண்டி தட்டுதடுமாறி சமாளித்து இங்கு நிற்கிறேன். சாதனை என்று ஏதும் இல்லை என் வாழ்வில்.
ஆனால் வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்தது. இனியும் கற்றுக் கொடுக்கும்...
ஒரு சில நம்பிக்கை துரோகங்களையும், அவமானங்களையும் கடந்த பிறகு மனது சற்று சஞ்சலத்துடன் இருக்கிறது, இதற்க்கு காரணம் எல்லாரையும் எதார்த்தத்தோடு நம்பும் முட்டாள் தனமாக கூட இருக்கலாம்...இத்தனை வருட வாழ்வில் என்னிடம் எனக்கு பிடித்த ஒரே விசயம் என்னை சாவின் விளிம்பில் நிறுத்தும் மனிதராக இருந்தாலும் நான் யாருக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்தது இல்லை...
இறுதி வரை இந்த குணம் என்னிடம் தங்க வேண்டும் என்று மிக கவனமாக இருக்கிறேன். இங்கும் நான் யாரையும் காயப்படுத்தவில்லை என்றே நம்புகிறேன். அதை மீறி ஏதாவது இருந்தால் மன்னித்து விடுங்கள். தவறு இருந்து மன்னிப்பு கேட்பதில் திருப்தி. தவறே இல்லாமல் மன்னிப்பு கேட்பதில் சந்தோஷம். அன்பு மட்டுமே என் சொத்து. நான் நானாகவே எப்போதும்...
வாழ்த்தியவர்களுக்கும்,வாழ்த்த மறந்தவர்களுக்கும் வாழ்த்த உள்ளவர்களுக்கும் என் நன்றிகள்...
"வாழ்த்துங்கள் வாழுங்கள்"
பிரியங்களுடன்...
மனுநாதன்
புதன், 30 ஏப்ரல், 2014
நட்பின் அகவை 23...
கைச்சுவை நாயகன், மதுரை மண்ணின் மைந்தன், அடக்கத்தின் திருவுருவம், கன்னிகளின் காத(வ)லன், உரத்த சிந்தனை, எளிய நடை, ஏற்றமிகு செயல்கள், ஐய்யமில்லா மனம், என நம் எல்லோர் மனத்தையும் கவர்ந்த அருமை நண்பன் தனசேகரன் அவர்களுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்...
சந்தோசமாக , சோதனைகைளை சாதனையாக்கி , வேதனைகளுக்கு சோதனை கொடுத்து , வெற்றியின் வேந்தனாகி எல்லோருக்கும் போதனையும் கொடுத்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்..!
...........................வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ...................
வியாழன், 13 பிப்ரவரி, 2014
அன்பிலும் மேலானது அன்பே!
காதல் அல்லது திருமணத்தை இரு உள்ளங்கள் இணையும் நிகழ்வாக நாம் கருதுகிறோம். ஒரு பெண்ணை/ஆணை காதலிக்க வைப்பதிலோ வெற்றிகரமாக திருமணம் செய்து கொள்வதிலோ சாதனை ஒன்றும் இல்லை. அந்த காதலை, உறவை எக்காலத்திற்குமானதாக நிலைக்கச் செய்வதில்தான் பெரும் சவால் இருக்கிறது.
கடந்த 15-20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. அதாவது அன்று வீடு தாண்டி, தெரு தாண்டி, நாடு தாண்டி ஒருவரை காதலிப்பதென்பது முடியாத அல்லது கடினமான செயலாக இருந்தது. அதனால் உறவுகளுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் மதத்திற்குள்ளும்மே பெரும்பாலனவர்களுக்கு வாழ்க்கை அமைந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை....
குடும்பமாக வாழ்வதும் ஒருவருக்கு ஒருவராக வாழ்வதும் அடிமை கருத்தியலோ பழமைவாதமோ அல்ல. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பவராக, நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மரியாதை கொண்டவராக சம உரிமை கொண்டாடுபவராக இருக்க வேண்டியது மனிதப் பண்புகளின் தலைசிறந்த அடையாளம். ஆகா, ஆண- பெண் உறவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது.
இன்றைய காதலர்கள் நாளைய தம்பதியராகவும், தம்பதியர் என்றேன்ரைக்கும் காதலர்களாகவும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, உங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்க்கைக்கு என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...!!
Courtesy:புதிய வாழ்வியல்
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!
சமீப காலமாக ஒரு சில நபரால் நட்பின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது இல்லை. அதனால் நெருங்கிய நட்புகளும் இல்லை சிலரை தவிர... எல்லாரிடமும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் தான்.. ஆனால் வாழ்வில் இடையில் ஏற்பட்ட ஒரு மன உளைச்சல் பகிர நம்பிக்கையான நட்பை தேடியது.. அதுவும் உண்மையாக முழுதும் புரிந்துகொள்ள முடிகிற நேர்மையான நட்புக்காக மனதில் தேடல் இருந்துகொண்டே இருந்தது.
மனதுக்கு நெருக்கமான நட்பாக வினோமுதலில் அறிமுகம் (முகநூலில் அல்ல), அட அழகாக இருக்கிறர்களே என்று தான் முதலில் பார்த்த போது தோன்றியது, ஆனால் சில நாட்களிலேயே என்னை அறியாமல் ஈர்த்தார் அழகை தாண்டி அன்பால்..தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்வும் என்னை குத்தி கிழித்து என் சுயத்தை அழிக்க முனைந்த நாட்கள் உண்டு. அதனாலேயே ஆரம்பத்தில் நட்பாக சிறிது தயக்கம் காட்டினேன்.. ஆனால் எல்லாவற்றையும் புறம்தள்ளி நட்பாக ஏற்று கொண்டாள். வினோவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடும் சண்டையும் அதிகம் வரும். என்னைவிட வயதில் சிறியவள். ஆனாலும் அதை எல்லாம் தாண்டி அன்பால் அந்த வயது வித்தியாசத்தை மறக்க செய்தாள். வினோவுக்கான "சுய மரியாதையை" (SELF RESPECT) நிலை நாட்டுவதில் ஒவ்வொரு முறையும் போராடி இறுதியில் நான் தோற்றே விடுகிறேன்...ஒரு நாளாவது வெற்றி பெறுவேன் என்ற மனிதத்தின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையோடு தொடர்கிறேன்...
மனக்குழப்பம் , சோர்வு என மனதளவில் நொறுங்கி இருக்கும் போது வினோவின் குரலும் பேச்சும் என்னை வெகு எளிதாக சகஜ நிலைக்கு கொண்டு வரும்.
என்ன செய்து இவள் அன்புக்கு நன்றி தெரிவிப்பது அன்பாகவே மாறி அவளுடன் கரைந்துவிடுவதை தவிர... எனக்கு possessiveness எல்லாம் கொஞ்சம் உண்டு எல்லாரிடமும் அல்ல மனதுக்கு நெருக்கமானவர்களிடம் அது வினோவிடம் நிறைய உண்டு...அதை வினோவிடம் வெளிபடுத்துவதும் இல்லை. சிலரின் நட்பு நாம் சாகும் வரை வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் ஒரு நட்பு இவளுடையது... தோழமையில் என் இறுதி வரை துணையாக நானே என்னுடயை கோவத்தால், ஈகோவால், கிறுக்குத்தனமான செயலால் சற்று தள்ளி நின்றாலும் மண்டையில் இரண்டு தட்டு தட்டி என்னை ஏற்று கொள்ள வேண்டும்...
அநேகமாக எல்லாரும் வாழ்விலும் சில துயரங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை தாண்டி தான் வந்திருப்பார்கள்.இந்த துயரம், ஏமாற்றம், அதிர்ச்சி எல்லாம் கடக்க நல்ல நட்பும் ஆறுதலான தோளும் அன்பான மனமும் நட்பாக அமைய வேண்டும்...அப்படி அமைந்த நான் ஒரு விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவன்...
அதனால் நான் தான் முதல் வாழ்த்து சொல்வேன்...எல்லா வளமும் பெற்று மன நிறைவாக, சந்தோசமாக, ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்...
திங்கள், 20 ஜனவரி, 2014
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும்...
மதமும் அதிகாரமும் ஒன்று சேரக்கூடாது.
-பிலிப் புல்மேன்
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் என்ற நூலை
எழுதி வெளியிட்டுப் அண்மையில் புகழ் பெற்றுள்ளவர் பிலிப் புல்மேன்
என்பவர். ஏசு, கிறிஸ்து என்ற இரு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியுள்ள இந்த நூலில் கத்தோலிக்க தேவாலயத்தைக் கடுமையாக விமர்சிப்பவராக ஏசுவை அவர்
சித்திரித்துள்ளார். புல்மேன் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் எழுதிய Dark
Materials என்ற நூல் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களையும், பல
விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டியில்
கூறியிருப்பது இங்கே தரப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற நாத்திகர் என்று உங்களைப்
பற்றி கூறுகிறார்களே?
உண்மையில் அவ்வாறு கூறப்படுவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. முன்பு
இருந்ததை விட, வேறு எவ்வாறாகவும் இருப்பதை விட அதிகமாக என்னை நான்
நாத்திகன் என்று நிச்சயமாக நினைப்பதில்லை. பெயர்ச்சொற்களில்
குறிப்பிடப்படும் அடையாளங்களை நான் விரும்புவதில்லை. வினைச்சொற்களால்
அடையாளப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். அடையாளம் காண்பது என்பது
மாற்றம் பெற இயன்ற செயல்பாடு மிக்க, ஆற்றல் மிகுந்த நடைமுறையே அன்றி,
மாற்றமற்ற நிலையாகத் தேங்கி நிற்கும் ஒன்று அல்ல. கடவுள் நம்பிக்கை
கொண்டவனல்ல நான் என்பது பொதுமக்களிடையே அடையாளம் பெற்றுள்ள எனது முக்கிய
அம்சங்களில் ஒன்று என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டாலும், என்னைப் பற்றி
அறியப்பட்டுள்ளது இது மட்டுமே என்றால், என்னைப் பற்றி எத்தகைய குறுகிய
கண்ணோட்டம் நிலவுகிறது, என்னைப் பற்றிய உண்மை எவ்வளவு குறைவாக புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது, என்ன குறுகிய அளவில் நான் புரிந்து
கொள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன்.ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் மற்றும் Dark
Materials என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தங் களின் மூன்று புதின
நூல்கள் கத்தோ லிக்க தேவாலயத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த உருவகக்
கதைகளாகும். முறை யாக அமைக்கப்பட்ட மத அமைப்புக்கு எதிரானவரா தாங்கள்?
அல்லது கடவுள் என்னும் கருத்திலேயே தாங்கள் நம்பிக்கை
கொண்டிருக்கவில்லையா-?
எந்த வகையான ஒரு கருத்துக்கும் எதிராக இருப்பது முட்டாள்தனமானதாக
இருப்பதாகும். எனது விருப்பமின்மை அல்லது ஏற்பின்மை எட்ட இயலாத தொலைவில்
உள்ள, மிகவும் பழமையானதும், மிகப் பல மக்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும்
இருக்கும் கடவுள் போன்ற ஒரு கருத்துக்கு, நான் கூறுவது அல்லது செய்வது
எதனாலும் தீங்கு நேர்ந்துவிடாது. நான் ஏற்றுக் கொள்ளாமல்
கண்டிப்பதெல்லாம் மதமும் அரசியலும் கலப்பதைத்தான். மதத் தலைவர்கள்
அரசியல் அதிகாரத்தையும் பெறும்போது, எல்லாமே விரைவில் மிக மிக
மோசமானவைகளாக ஆகிவிடுகின்றன.
ஏசுவிற்கு கிறிஸ்து என்ற இரட்டைச் சகோதரர் இருப்பது என்பது போன்ற தங்
களின் கருத்து பெரும்பாலான கிறிஸ்து வர்களுக்கு தெய்வ நிந்தனையாகவே
தோன்றுகிறது. இந்த எண்ணம் உங் களுக்கு எவ்வாறு வந்தது?அது தெய்வ நிந்தனையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால்
இரட்டையர்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்து என்னவோ, கிறித்துவ
மதத்தைப் போலவே பழமையானதாகும். சந்தேகப் பிறவியான தாமஸ் ஒரு இரட்டைப்
பிறவி. மனிதனான ஏசுவின் இயல்புக்கும், புராணக்கதையின் கிறிஸ்துவின்
இயல்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாடகமாக்கவே நான் முயன்றுள்ளேன்.
கிறிஸ்தவ மதத்தவராக வளர்ந்தவர் நீங்கள். கிறித்துவ தேவாலயத்தை இந்த
அளவுக்கு உங்களை விமர்சிக்கச் செய்தது எது-?
வெறுமனே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததும், வரலாற்றினைப்
படித்ததும்தான்.
கிறிஸ்துவ தேவாலயத்தைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது இஸ்லாம், யூத மதம்
போன்ற மற்ற மதங்களைப் பொறுத்தவரையிலும் கூட உண்மையாகத் தான் இருக்க
வேண்டும். இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-?
எனக்குத் தெரியவில்லை. நான் நினைப்பது போன்று உருவானது என்பதால்,
கிறித்துவ மதத்தைப் பற்றி என்னால் எழுத முடியும். கிறிஸ்துவ மதத்தைப்
பொறுத்தவரை நான் எனது வீட்டில் இருப்பதைப் போன்றது. அதன் நம்பிக்கைகளும்,
கதைகளும் எனக்குப் புதியவையல்ல. கிறித்துவ மதச் சடங்குகளும், கூட்டு
வழிபாடுகளும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. மற்ற மதங்களை இது
போன்று நான் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கதைகளைக் கூற நான்
முயலமாட்டேன்.அடிப்படை மதவாதிகளைப் போலவே கூச்சலிடும் மூடநம்பிக்கையா ளர்கள் தானே
ரிச்சர்டு டாகின்ஸ் போன்ற புதிய நாத்திகர்களும்? மதத்தைப் பற்றி இரு வேறு
கருத்து கொண்டு இருக்கும் இரு சாராரின் நியாயமான குரலைக் கேட்க விடாமல்
மூழ்கடிக்கும் கூச்சலல்லவா அது? அது ஒரு தவறான குற்றச்சாட்டு.
உயிர்த்தோற்ற உயிரியல் துறையில் டாகின்ஸ் ஒரு மாபெரும் மேதை அவரிடம்
இருப்பதைப் போன்ற வெளிப்படையான நேர்மையை வேறு எங்கும் காணமுடியாது.
மிகுந்த ஆற்றலுடனும், மிகவும் தெளிவாகவும் அவர் எழுதுகிறார். அவரால்
கண்டிக்கப்படும், விமர்சிக்கப் படும் மனிதர்கள் அதை விரும்புவதில்லை.
எவர் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்க டாகின்ஸ் விரும்பியதாக நான்
எப்போதும் கேள்விப்பட்டதே இல்லை. தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின்
தலையை வெட்டவேண்டும் என்று பதாகை எடுத்துக் கொண்டு அவர் தெருவில் வந்து
கேட்பதை நீங்கள் பார்க்காத வரை, அவரது கருத்து மதஅடிப்படை வாதிகளின்
கருத்து போன்றது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அடிப்படையற்றது.
(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா கிரெஸ்ட் எடிஷன் 5.6.2010)
(தமிழில்: சி.மனுநாதன்)