சனி, 1 நவம்பர், 2014

நன்றி...நன்றி...நன்றி...

இந்த நவம்பரில் கால் நூற்றாண்டு வயதில் அடி எடுத்து வைக்கிறேன். ஓரளவு நல்லது கெட்டது பற்றிய அறிவு எனக்கும் உண்டு. எல்லோரையும் போல எல்லாவற்றையும் தாண்டி தட்டுதடுமாறி சமாளித்து இங்கு நிற்கிறேன். சாதனை என்று ஏதும் இல்லை என் வாழ்வில். ஆனால் வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்தது. இனியும் கற்றுக் கொடுக்கும்... ஒரு சில நம்பிக்கை துரோகங்களையும், அவமானங்களையும் கடந்த பிறகு மனது சற்று சஞ்சலத்துடன் இருக்கிறது, இதற்க்கு காரணம் எல்லாரையும் எதார்த்தத்தோடு நம்பும் முட்டாள் தனமாக கூட இருக்கலாம்...இத்தனை வருட வாழ்வில் என்னிடம் எனக்கு பிடித்த ஒரே விசயம் என்னை சாவின் விளிம்பில் நிறுத்தும் மனிதராக இருந்தாலும் நான் யாருக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்தது இல்லை... இறுதி வரை இந்த குணம் என்னிடம் தங்க வேண்டும் என்று மிக கவனமாக இருக்கிறேன். இங்கும் நான் யாரையும் காயப்படுத்தவில்லை என்றே நம்புகிறேன். அதை மீறி ஏதாவது இருந்தால் மன்னித்து விடுங்கள். தவறு இருந்து மன்னிப்பு கேட்பதில் திருப்தி. தவறே இல்லாமல் மன்னிப்பு கேட்பதில் சந்தோஷம். அன்பு மட்டுமே என் சொத்து. நான் நானாகவே எப்போதும்... வாழ்த்தியவர்களுக்கும்,வாழ்த்த மறந்தவர்களுக்கும் வாழ்த்த உள்ளவர்களுக்கும் என் நன்றிகள்...
"வாழ்த்துங்கள் வாழுங்கள்"
பிரியங்களுடன்...
மனுநாதன்