திங்கள், 7 நவம்பர், 2011

சனி, 10 செப்டம்பர், 2011

Shakespeare Sonnet-a-Day


Ah! wherefore with infection should he live,
And with his presence grace impiety,
That sin by him advantage should achieve
And lace itself with his society?
Why should false painting imitate his cheek
And steal dead seeing of his living hue?
Why should poor beauty indirectly seek
Roses of shadow, since his rose is true?
Why should he live, now Nature bankrupt is,
Beggar'd of blood to blush through lively veins?
For she hath no exchequer now but his,
And, proud of many, lives upon his gains.
O, him she stores, to show what wealth she had
In days long since, before these last so bad.

வியாழன், 12 மே, 2011

நாளந்தா பல்கலைக்கழகம் - ஒரு கண்ணோட்டம்

நாளந்தா பல்கலை கழகத்தை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம் ஆனால் மிக புகழ் பெற்ற அந்த நாளந்தா பல்கலை கழகம் எப்போது எங்கே இருந்தது? அதன் சிறப்புகள் என்ன? என்பது பலருக்கு தெரியாது.

தற்போதைய பீகார் மாநில தலைநகரமான பாட்னாவின் ஆதிகால பெயரே பாடலிபுத்திர நகரம்.இங்கு இருந்த நாளந்தா பல்கலை கழகம் எல்லோர் நினைவிலும் எளிதாக வரும்.
இன்று கேம்பிரிட்ஸ் பல்கலை கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் உலகளவில் தரப்படுகிறதோ அதை விட பத்து மடங்கு மரியாதை நாளந்தா பல்கலை கழக மாணவர்களுக்கு அக்காலத்தில் இருந்தது.


ஆரம்பத்தில் நாளந்தா இருந்த இடம் பிரம்மாண்டமான மாந்தோப்பாக இருந்தது. அதை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து ஐநூறு வணிகர்கள் வாங்கி கௌதம புத்தருக்கு தானமாக கொடுத்தனர்.
புத்தரின் காலத்திற்கு பிறகு மகதநாட்டு அரசன் சக்கராதித்தனும் அவனது வழித்தோன்றல்களான புத்த குப்த, தகாத குப்த, பால நித்யா, வஞ்சரா ஆகியோர்கள் நாளந்தாவை பிரம்மாண்ட வடிவில் கட்டி முடித்தனர்.

கி.பி. நானூறு ஆண்டளவில் சீனாவிலிருந்து வந்த பாகியான் நாளந்தா சென்றுள்ளார். அவர் அதை சீன மொழியில் நாளோ என்று அழைக்கிறார்.

நாளந்தா பல்கலை கழகத்தின் மைய மைதானத்தில் புத்தரின் நேரடி சீடரான சாரி புத்தன் சமாதி இருந்ததை தான் பார்த்ததாக எழுதி வைத்துள்ளார்.

இந்த பல்கலைக் கழகத்தின் ஆசியர்களாக ஆயிரம் பௌத்த துறவிகள் இருந்தார்கள்.

கல்வி போதிப்பதற்கு பகல் பொழுது மட்டும் போதாமல் இரவு வேளையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டதாக யுவாங்-சுவாங் கூறுகிறார்.

பல வெளிநாட்டு மாணவர்களும் அங்கு இருந்திருக்கிறார்கள். தர்ம பாலர், சந்திர பாலர், பிராக மித்திரர், ஜீன மித்திரர், ஞான சங்கீரர், சீலா கார் போன்ற புகழ் பெற்ற பேராசிரியர்கள் பணி புரிந்ததாகவும் யுவான்-சுவாங் கூறுகிறார்.

கி.பி. அறுநூற்று எழுபத்தி ஐந்தில் இந்தியாவிற்கு வந்த ட்சிங் என்ற சீன யாத்திரிகர் நாளந்தாவில் பத்து வருடம் தங்கியிருந்திருக்கிறார்.
அவர் நாளந்தா கட்டிட அமைப்பு எட்டு மண்டபங்களும் முன்னூறு தங்குமிடங்களும் பல நூறு வகுப்பறைகளும் இருந்ததாகவும் 200 கிராமங்களிலிருந்து கிடைக்கிற வருவாய், நிர்வாக செலவிற்கு பயன்பட்டதாகவும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்ததாகவும் எழுதுகிறார்.

நாளந்தாவில் எல்லா விதமான கல்வியும் துறை வாரியாக போதிக்கப்பட்டது.
மிக குறிப்பாக பௌத்த மெய் பொருளியிலும், பௌத்த தந்ர யோகமும் போதிக்கப்பட்டது.

சீனா, கொரியா, திபெத், ரஷ்யாவின் சிலப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்தார்கள்.

வந்தவர்கள் அனைவருமே நாளந்தாவில் சேர்க்கப்படுவதில்லை. பல தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு நூற்றுக்கு இருபது பேர் மட்டுமே கல்வி பயில சேர்க்கப்பட்டனர்.

தற்போது நாளந்தா இருந்த இடத்தில் புதை பொருள் ஆய்வு நடத்தும் போது பல தெய்வ திருவுறு சிலைகள் கிடைக்கப்பட்டிருப்பதை வைத்து அங்கு சடங்கு முறை பயிற்சியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

ஒவ்வொரு மாணவனும் குறைந்தது ஏழு வருடமாவது நாளந்தாவில் படித்தனர்.

படிக்கும் காலத்தில் மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

மாறாக அவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, வைத்திய செலவு எல்லாமே இலவசமாக கொடுக்கப்பட்டது.

ஆதிகால இந்தியர்கள் கல்வியை அறிவு வளர்ச்சிக்கான கருவியாக கருதினார்களே தவிர வயிறு வளர்ச்சிக்கான பொருளாக கருதவில்லை.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அறிவியலுக்கும், மதத்துக்குமிடையே நடக்கும் போராட்டம்...!!

அண்மைக் காலமாக கிறித்துவ தேவாலயத்தின்மீது சுமத்தப்பட்டு வரும் பாலியல்
வன்முறைக் குற்றச்சாற்றுகளைப் பற்றி கூறும்போது, பிரபல கடவுள் மறுப்பாளர்
ரிச்சர்ட் டாகின்ஸ் கூறுகிறார்: குழந்தைகளின் உடல்கள் மீது பாதிரியார்கள்
பாலியல் தாக்குதல் நடத்தியதை விட, மதம் என்னும் நோய்க்கிருமியைப்
புகுத்தி குழந்தைகளின் மனதுக்கு அவர்கள் இழைக்கும் தீங்கை நினைத்துத்தான்
நான் அதிகமாகக் கவலைப்படுகிறேன். வேறு சொற்களில் கூறுவதானால், ஆன்மிகப்
படையெடுப்பின் மூலம் குழந்தைகளின் மனதைக் கெடுப்பது அவர்களின் உடல்களைக்
கெடுப்பது போலவே, இன்னும் அதைவிட மோசமான, தீயசெயலாகும் என்பதுதான்.
கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்சே அறிவித்து 150 ஆண்டுகள் கடந்துவிட்ட
நிலையில், கடவுளின் மீதான போர் இந்த 21 ஆம் நுற்றாண்டில் ஏன் உச்ச
கட்டத்தை எட்டியுள்ளது?

வரலாற்றில் இதற்கு முன் எப்போதும், 15_17 ஆம் நூற்றாண்டு காலத்தில்
கத்தோலிக்க மத எதிர்ப்பாளர்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளின்
போதும், பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதற்காக கலீலியோ மீது மத
நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டபோதும் கூட, அறிவியலும் மதமும் இத்தகைய
ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதே இல்லை.

உயிரையே சோதனைச் சாலையில் உருவாக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் தனது
ஆற்றல் பற்றி உரிமை கொண்டாடி படைப்புத் தொழிலைக் கடவுளிடம் இருந்து
கைப்பற்றி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து மதங்களிடமிருந்து வன்முறைத்
தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது. அதன்
விளைவாக எந்த விதமான மத நம்பிக்கையும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த
முரண்பாட்டின் மய்யத்தில் இரண்டு அடிப்படையான கேள்விகள் எழுகின்றன.
பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? உயிர்கள் எவ்வாறு தோன்றின? என்பவைதான் இவை.
பிரபஞ்சம் தோன்ற பெரு வெடிப்புதான் காரணம் என்றும், டார்வினின் இயற்கைத்
தேர்வுதான் உயிரினத் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்குமான காரணம் என்றும்
அறிவியல் கூறுகிறது. பிரபஞ்ச தோற்றத்துக்கும், உயிர்களின் படைப்புக்கும்
உயர் ஆற்றல் கொண்ட, நுண்ணறிவுடன் வடிவமைக்கும் (Intelligent Design)
படைப்பாளி எனும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் மதம் கூறுகிறது.
உயர்ந்த படைப்பாளியான கடவுள் என்று ஒருவர் இருந்தால், அந்தக் கடவுளைப்
படைத்தவர் யார் என்று கடவுள் மறுப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவர்களில் மிகவும் முக்கியமானவர், வழுக்குப் பாதைக்கு எதிராக எச்சரிக்கை
அளிக்கும், அமெரிக்க மனஇயலாளர் சாம் ஹாரிஸ் என்பவர் ஆகும். கடவுளை
நீங்கள் ஒருவர் மறுத்தால் மட்டும் போதாது; மதம் என்னும் நோய்க்கு
இரையாகக் கூடிய வாய்ப்பு உள்ள குழந்தைகள் உள்பட அனைவரின் சார்பாகவும்
நீங்கள் கடவுளை மறுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மதப் போர்களின் மூலமாகவும், மதக் கருத்துக்கு எதிரானவர்கள்மீது
மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறை மூலமாகவும் கடந்த ஆயிரமாண்டில்
பகுத்தறிவுக்கு ஒவ்வாத வன்முறை மற்றும் துன்பங்கள் மனித இனத்தின்மீது
மதத்தின் பெயரால் இழைக்கப்பட்டதால் கடவுள் மறுப்பாளர்கள் மதத்தைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றனர். இந்த மத வன்முறை கிறித்துவ
மதத்துடன் நின்றுவிட வில்லை. தங்களின் பெண்களை இழிவாக நடத்தி, அவர்களின்
கல்வி மற்றும் அறிவினை மழுங்கடிக்கும் முஸ்லிம் தாலிபான்களும் தங்கள்
செயல்களுக்கு பதில் சொல்லவேண்டியவர்களே. தமிழர்களின் நியாயமான
கோரிக்கைகளை புத்த மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததன் விளைவே பல
ஆண்டு காலம் இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டுப் போராகும்; இப்போரினால்
ஏற்பட்ட வடுக்கள் மறைய பல தலைமுறைகள் பிடிக்கும்.

முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்ட இந்து மத பாரம்பரியத்தில் கடவுள்
மறுப்பு என்பது இந்தியர்களுக்கு அந்நியமான கருத்தேயாகும். இந்து மதத்தில்
பெருமையாகக் கூறிக்கொள்ளப்படும் தத்துவமே, இந்த உலகம் எப்படி தோன்றியது?
எப்படி முடியும்? கடவுள் மட்டுமே அறிவார்; ஒருவேளை கடவுளுக்கும்
தெரியாமல் இருக்கலாம் என்பதுதான்.

தேவாலயம் போன்ற மத அமைப்புகளுக்கு எதிரானவர்கள்தான். கூட்டு
வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டது தேவாலயம் என்ற அமைப்பு. இத்தகைய கூட்டு
வழிபாட்டு முறை இந்து மதத்தில் இல்லை. இந்து மதத்தை அரசியலாக்கி
இந்துத்வா கொள்கையை நிலைநிறுத்த சங் பரிவாரங்கள் மேற்கொண்ட முயற்சிகளும்
பலிக்கவில்லை.

- நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா -கிரஸ்ட் எடிஷன் 5.6.2010